“தண்டகாரண்யம்” சினிமாப்பட இயக்குனர் அதியன் ஆதிரைக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா

அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை பிரதிபலிக்கும் “தண்டகாரண்யம்” சினிமாப்படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரைக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது,
கோவில்பட்டி அங்கோ பிளாசா கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்னை அரசு கவின் கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்ரு தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் விமல் வங்காளியர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வக்கீல் செந்தில்நாதன், எழுத்தாளர் கோணங்கி, ஆவணப்பட இயக்குனர் கு.கா.காவலன், வரலாற்று ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், திரைப்பட விமர்சகர் காமராஜ், அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர் தமிழினியன், விசிக விருதுநகர் மாவட்டச்செயலாளர் சந்திரன், தூத்துக்குடிவடக்கு மாவட்டச்செயலாளர் முருகன், மாவட்டச்செய்தி தொடர்பாளர் மனுவேல், தமிழ் பாப்திஸ்து பள்ளிகளின் தாளாளர் லால்பகதூர் கென்னடி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி நல்லய்யா, இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் ஷெகினா இசைப்பள்ளி நிறுவனர் ஜோஸ் நன்றி கூறினார்.







