கரூரில் 41 பேர் பலி: கோவில்பட்டியில் தவெக வினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் நீத்த 41 பேர் மற்றும் இத்துயர சம்பவத்தை தாங்க முடியாமல் தற் கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்ட இணைச் செயலாளர் ஐயப்பன் ஆகியோருக்கு கோவில்பட்டியில் தவெக வினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. சார்பில் கோவில்பட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி பொறுப்பாளர் சுமங்கலிராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் ராஜேந்திரசிங், வடக்கு மாவட்ட பொரு ளாளர் செல்வின்சுந்தர், நகர பொறுப்பாளர் ஆரோக்கியராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இனிவரும் காலங்களில் இது போன்ற துயர சம்பவம், அசம்பாவிதங்கள், நடை பெறாமல் பாதுகாப்போம்
தூய அரசியலில் தொய்வு ஏற்படாமல் முன்னேறி செல்வது, இயக் கத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தற்காலிக தடைகளை தகர்த்து வெற்றி பயணத்தை முன்னெடுத்து செல்வோம்
,மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பா ளர் தளபதி விஜய்யை 2026 இல் முதல்வர் அரிய ணையில் அமர்த்திட உறுதி ஏற்போம் என்றும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து உயிர்நீத்தோர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கோபி, பாலமுருகன், முருகன், கார்த்திக்மாறன், சரண்யா, வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் வழக்கறிஞர் ராமமூர்த்தி செந்தில், மனோஜ்குமார், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







