நாடு முழுவதும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவையை வலியுறுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல்,கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல்,சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலக்கரந்தை கிராம ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மஞ்சப்பை […]
திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம்; நாமக்கல் பிரசாரத்தில் விஜய் பேச்சு . தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வாகனம் மீது நின்றபடி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது, நம்முடைய நாமக்கல் மாவட்டம. இங்க லாரி பாடி கட்டுகிற தொழிலில் இருந்து இன்னும் நிறைய […]
கோவில்பட்டி அருகே கே.சுப்பிரமணியபுரம் ஊராட்சி, க.வேலாயுதபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது .ஊராட்சி மன்ற . முன்னாள் துணைத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில ரெட்டி ஜனசங்க இளைஞரணி தலைவர் மகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் முகாம் நோக்கவுரையாற்றினார். […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனை நடைபெற்றது. […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் லட்சுமணகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் லிங்கேஸ்வரி, சித்ரா, முன்னாள் மாவட்டத் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மின்னணுவியல் துறை உதவிப்பேராசிரியர் சிவராம் சுப்பு வரவேற்று பேசினார். .முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து பெருந்தலைவர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றி, வங்கியின் ஏடிஎம் அட்டையை 40 மாணவர்களுக்கு வழங்கினார்.. கணிதவியல் துறைத்தலைவர் அ.பாண்டியராணி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 310 […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இளையரசநேந்தல் மற்றும் அக்னி சிறகுகள் சமுக சேவை அறக்கட்டளை இணைந்து உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரத்தான முகாம் நடத்தின. .முகாமை கோவில்பட்டி தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் துளசிலட்சுமி, தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ரவிந்திரன் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரத்த வங்கி பொறுப்பாளர் சேவியர், மருத்துவக்குழுவினர், […]
தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தமிழ்நாடு வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரியமுறையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மக்களின் ஜனநாயகத்தையும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பல மாநிலங்களில் பறித்ததைக்கண்டித்தும். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று உச்சநீதிமன்றத்தில் […]
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காளி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சார்பில் 26-9-2025 அன்று மாலை தூத்துக்குடி வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து சிவன் கோவில் வரையிலான காளி ஊர்வலம் நடத்திட இருப்பது காவல்துறையின் கவனத்திற்கு தெரியவருகிறது. மேற்கண்டவாறு ஊர்வலம் நடத்த இருப்பது குறித்து பரிசீலனை செய்ததில், கீழ்க்கண்ட […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் 3-ம் நாள் நாளான நேற்று காலை 7.30 ,மணி முதல் இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காப்பு கட்டி விரதம் […]







