கோவில்பட்டி கல்லூரியில் அரசின் மாணவர் உதவித்திட்டம் தொடக்கம்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மின்னணுவியல் துறை உதவிப்பேராசிரியர் சிவராம் சுப்பு வரவேற்று பேசினார்.
.முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து பெருந்தலைவர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றி, வங்கியின் ஏடிஎம் அட்டையை 40 மாணவர்களுக்கு வழங்கினார்..

கணிதவியல் துறைத்தலைவர் அ.பாண்டியராணி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 310 மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு, என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஔி பரப்பப்பட்டது. இவ்ஔிப்பரப்பினை இதற்குரிய ஏற்பாடுகளை புதுமைப் பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் வே.கோமதி சங்கரேஸ்வரி ,துணை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ஆனந்த், உதவியாளர் ப.பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
சட்ட விழிப்புணர்வு நிகழ்வு

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சம வாய்ப்புக்கழகம் மற்றும் கேலி வதைத் தடுப்புக்கழகம் இணைந்து ‘அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கேலிவதைக்கு எதிரான சட்டங்கள்’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் கேலி வதை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் எ.சுசிலா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையுரையாற்றி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினரான வழக்கறிஞர் ப.சிவக்குமார் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் அது வழங்கிய இட ஒதுக்கீடு குறித்தும் சமத்துவம் குறித்தும் கேலி வதைத் தடுப்புச் சட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.
முடிவில் சம வாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.சித்ரலேகா நன்றி கூறினார்







