ஜிஎஸ்டி வரி குறைப்பு சாதனை விளக்க பிரசார கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் லட்சுமணகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் லிங்கேஸ்வரி, சித்ரா, முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் பாலு, கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை மேற்கு ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் ராஜா, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் பாலமுருகேசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்







