கோவில்பட்டி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி, சங்கர் ஐயர் செய்தனர்.
கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன்.கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







