கோவில்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம்
கோவில்பட்டி அருகே கே.சுப்பிரமணியபுரம் ஊராட்சி, க.வேலாயுதபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது .ஊராட்சி மன்ற . முன்னாள் துணைத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநில ரெட்டி ஜனசங்க இளைஞரணி தலைவர் மகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் முகாம் நோக்கவுரையாற்றினார். ஊராட்சி செயலர் பூபதி அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் மருத்துவர் ஆதிஷ் தலைமையில் செவிலியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதேவி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,காய்ச்சல் தலைவலி, காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் இலவசமாக வழங்கினர்,.
பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தின் கோவில்பட்டி மண்டல மேலாளர் முத்துராம்பாண்டியன், கழுகுமலை கிளை மேலாளர் பிரேசிலா, கோவில்பட்டி வட்டார பயிற்றுநர் மகேஸ்வரி., உள்பட பலர் கலந்து கொண்டனர் .







