கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இளையரசநேந்தல் மற்றும் அக்னி சிறகுகள் சமுக சேவை அறக்கட்டளை இணைந்து உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரத்தான முகாம் நடத்தின.

.முகாமை கோவில்பட்டி தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் துளசிலட்சுமி, தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ரவிந்திரன் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ரத்த வங்கி பொறுப்பாளர் சேவியர், மருத்துவக்குழுவினர், மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் முத்துசாமி,வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் கருணாநிதி,சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை அக்னி சிறகுகள் சமுக சேவை நிர்வாக உறுப்பினர் முத்துமாரியப்பன் மற்றும் உதவி பேராசிரியர் மாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 40 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.







