மேலக்கரந்தையில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவையை வலியுறுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல்,கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல்,சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலக்கரந்தை கிராம ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார்.தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் கண்ணன்,ஊராட்சி செயலர் ஆறுமுகம்,சுகாதார உறுப்பினர் பவித்ரா மற்றும் ட பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட் பை ,மீண்டும் மஞ்சப்பையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.







