தூத்துக்குடியில் இன்று மாலை காளி ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு; காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காளி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சார்பில் 26-9-2025 அன்று மாலை தூத்துக்குடி வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து சிவன் கோவில் வரையிலான காளி ஊர்வலம் நடத்திட இருப்பது காவல்துறையின் கவனத்திற்கு தெரியவருகிறது.
மேற்கண்டவாறு ஊர்வலம் நடத்த இருப்பது குறித்து பரிசீலனை செய்ததில், கீழ்க்கண்ட காரணங்களுக்காக இந்து முன்னணி சார்பில் 26-9-2025 அன்று தூத்துக்குடி நகர பகுதியில் காளி ஊர்வலம் நடத்திட நடத்தினால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் அதிகாரி அவர்களால், காளி ஊர்வலம் நடத்திட அனுமதி மறுக்கப்பட்டு தங்களது தரப்பினருக்கு அறிவிப்பு சார்பு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி நகர பகுதிகளில் இது வரை கடந்த காலங்களில் இந்து முன்னணி சார்பில் மேற்கண்டவாறு காளி ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்படாத நிலையில், தற்போது புதிதாக அதிகப்படியான நபர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியினை நடத்திட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.
தங்களுக்கு புதிதாக ஊர்வலம் நடத்திட அனுமதிக்கும் பட்சத்தில், மேலும் பல்வேறு அமைப்புகள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட தொடர்ந்து அனுமதி கோர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

குலசை முத்தாரம்மன் கோவில் தசாரா திருவிழாவினை முன்னிட்டு அதிகப்படியான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை கொண்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே. சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக தூத்துக்குடி நகர பகுதியில் அதிகப்படியான நபர்கள் ஒன்று கூடும் இதர நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்க இயலாது.
ஊர்வலத்தின் வழித்தடமானது தூத்துக்குடி நகரின் பிரதான போக்குவரத்து நிறைந்த மற்றும் குறுகலான சாலை பகுதியாகும். எனவே, தங்களது ஊர்வலம் நடத்திட அனுமதிக்கும் பட்சத்தில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட அதிமுக்கிய மருத்துவமனைகள், தூத்துக்குடி பழைய தங்களது ஊர்வலத்தின் வழித்தடமானது. தாங்கள் ஊர்வலம் நடத்திடும் பட்சத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பேருந்து நிலையம் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால்,
காளி ஊர்வலம் என்ற பெயரில் கடந்த காலங்களில் இல்லாமல் தற்போது பல்வேற அமைப்புகள் சார்பாக வெவ்வேறு நாட்களில் ஊர்வலம் நடத்திட அனுமதிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஒற்றுமை பொது அமைதி. போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு குந்தகம் ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மேற்கண்ட காரணங்கள், சட்ட ஒழுங்கு, பொது அமைதி மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி சார்பில் 26.9.2025 அன்று மாலை தூத்துக்குடி நகர பகுதியில் காளி ஊர்வலம் நடத்தினால் பிரிவு 168-172 BNSS படி காவல்துறையின் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாணைக்கு மாறாக செயல்படும் பட்சத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரவிக்கப்பட்டுள்ளது.







