தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மர்ம நபர்கள் வாட்சப் கால் மூலம் தொடர்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர், அந்த பெண்ணிடம் ,உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூ. 2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்/ ,மேலும் மனித கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சத்தை நூதன முறையில் பறித்தனர், இது பற்றிய புகாரின்பேரில் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் இயற்பியல் துறையும் கோயம்புத்தூர் அதினா பாண்டியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ‘உயிர் மருத்துவ கருவி’ என்னும் தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தின . இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையும் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரையும் வழங்கினர். அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் அதினா பாண்டியன் பிரைவேட் லிமிடெட் நிறுவன பயிற்சியாளர்களான கிரியா சக்தி, கிரிதினா ஆகிய இருவரும் சேர்ந்து மாணவ, மாணவர்களுக்கு உயிர் மருத்துவ கருவி பற்றிய […]
இந்தியாவில் கர்நாக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். இத்தகையை சிறப்புபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் […]
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தரம் உயர்த்திட வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் இரத்ததானக்கழக அறக்கட்டளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார், மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் மற்றும் தண்ணீர் வசதி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவம் இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் உட்பட்ட சேவைகள் பிரசவ வார்டிலேயே அமைத்து தரவேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா 10-9-2025 புதன்கிழமை நடைபெறுகிறது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேகம் 10-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் கும்ப லக்கனத்தில் நடைபெற இருக்கிறது, வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 காலிப் பணியிடங்களுக்கு TNUSRB -இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு அறிவிக்கை( Notification) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது வரும் 9.11.2025 அன்று நடைபெறும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு (அ) அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025. இந்த […]
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சி பொன்நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இப்பகுதியில் அடிப்படை தேவைகளான சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வலியுறுத்தி பொன்நகர் பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்கள் போராட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார்., மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ என் டி யு சி ராஜசேகரன், மகேந்திரன், மாமன்னர் […]
பீகாரில் 19 ஆவது தேசிய தரைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக தரைப்பந்து அணி சப் ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர், ஜூனியர் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் விளையாட உள்ளனர். தமிழக அணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5 வீராங்கனைகளும் 6 வீரர்களும் தேர்வாகியுள்ளனர் தேர்வான வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் […]
ஆகஸ்டு 29-ந் தேதியில் இருந்து 100 டாலருக்கு மேல் மதிப்புடைய பொருட்கள் அமெரிக்காவுக்கு வரும்போது சுங்க வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலை 30-ந் தேதி அமெரிக்க அரசு நிர்வாக உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இருப்பினும், இப்பிரச்சினையில் நிலவிய தெளிவின்மை காரணமாக, அமெரிக்கா செல்லும் விமானங்கள், அமெரிக்காவுக்கான தபால்சேவைகளை ஏற்க முடியாது என்று அறிவித்தன. அதன் அடிப்படையில், இந்திய தபால்துறை, […]
.வருகிற 7ம் தேதி இரவு நடைபெற உள்ள முழு சந்திர கிரகணம் ஆகும், வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் ஆகும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. சந்திர கிரகணத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பயிற்சி கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு […]







