பீகாரில் தேசிய தரைப்பந்து போட்டி: தமிழக அணிகளில் தூத்துக்குடி மாவட்ட வீரர், வீராங்கனைகள்
பீகாரில் 19 ஆவது தேசிய தரைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழக தரைப்பந்து அணி சப் ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர், ஜூனியர் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் விளையாட உள்ளனர்.
தமிழக அணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5 வீராங்கனைகளும் 6 வீரர்களும் தேர்வாகியுள்ளனர் தேர்வான வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

கே ஆர் கல்லூரியில் இருந்து சண்முகப்பிரியா, வர்ஷா, கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அர்ச்சனா, ராகினி, எட்டையாபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கார்த்திகா, நாடார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, கபீஷ், வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து நவபாரதி , சர்வேஷ், செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து உத்தண்டராமன், ஜான் போஸ்கோ பள்ளியிலிருந்து சஞ்சய் தரன், ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர்

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் வீராங்கனைகளை தூத்துக்குடி மாவட்ட தரைப்பந்து கழக தலைவர் மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ், முதுநிலை துணைத்தலைவர் மருத்துவர் சீனிவாசகன், துணைத்தலைவர்கள் முனைவர் குருசித்திர சண்முக பாரதி, மருத்துவர் பாலமுருகன், பொருளாளர் பாலாஜி, செயலாளர் வேல்முருகன், துணைச் செயலாளர்கள் உமாசங்கர்,துரை , சுரேஷ்குமார், முகேஷ் குமார், ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
வீரர்கள் வழியனுப்பு நிகழ்ச்சியில் தரைப்பந்து விளையாட்டு கழக உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், கார்த்திக் ராஜா, அருண்குமார், தரைப்பந்து பயிற்சியாளர் ஜெய்கணேஷ், துர்க்கை அம்மாள், மகேஷ் குமார், மணிகண்டன், ஆகியோர் கலந்துகொண்டனர்







