இலுப்பையூரணி ஊராட்சி பொன்நகர் மக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சி பொன்நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இப்பகுதியில் அடிப்படை தேவைகளான சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வலியுறுத்தி பொன்நகர் பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்கள் போராட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார்., மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ என் டி யு சி ராஜசேகரன், மகேந்திரன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நலஇயக்கத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், பொன்நகர் பகுதியை சேர்ந்த சங்கர், மாடசாமி, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், கோவில்பட்டி சார் ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது.







