சீருடை பணியாளர் பதவிக்கான போட்டி தேர்வர்கள், மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 காலிப் பணியிடங்களுக்கு TNUSRB -இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு அறிவிக்கை( Notification) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வானது வரும் 9.11.2025 அன்று நடைபெறும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு (அ) அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025. இந்த தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 8.9.2025 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது .

வாரம் தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google Forms படிவத்தை உடன் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
https://forms.gle/RokvxiE2e2Vmr9tP9
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,







