கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா 10-ந்தேதி நடக்கிறது
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா 10-9-2025 புதன்கிழமை நடைபெறுகிறது.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேகம் 10-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் கும்ப லக்கனத்தில் நடைபெற இருக்கிறது,

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, தீபாராதனை நடக்கிறது,
காலை 9 மணிக்கு மேல் கும்பங்கள் எழுந்தருளல், காலை 10 மணிக்குள் விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது,

நண்பகல் 12மணியளவில் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் அன்னதானம் நடைபெறும்.
இரவு 7 மணி அளவில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா முதல் நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் பத்திரகாளியம்மன் அமர்ந்து திருவீதி உலா வருதல்.நடைபெறும்,
பூஜையை நடத்திக் கொடுப்பவர் தூத்துக்குடி செல்வம் பட்டர் விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் நிர்வாகிகள் மற்றும் கோவில் குழுவினர் செய்து வருகிறார்கள்.







