கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தரம் உயர்த்திட வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் இரத்ததானக்கழக அறக்கட்டளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார்,
மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் மற்றும் தண்ணீர் வசதி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவம் இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் உட்பட்ட சேவைகள் பிரசவ வார்டிலேயே அமைத்து தரவேண்டும்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு ஊழலை தடுத்து நிறுத்தவேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழ்ரசன், ஐஎன்டியூசி ராஜசேகரன், மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நலஇயக்கத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழர் கட்சி பாண்டி, தமிழ்பேரரசு கட்சி இசக்கி, மற்றும் இரத்ததான கழக நிர்வாகிகள் வேல்முருகன், லட்சுமணன், வேலுச்சாமி, கபதியோன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, காளிராஜ் மற்றும் திரளான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







