பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முழு சந்திர கிரகணம் காணும் பயிற்சி
.வருகிற 7ம் தேதி இரவு நடைபெற உள்ள முழு சந்திர கிரகணம் ஆகும், வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் ஆகும்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. சந்திர கிரகணத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான பயிற்சி கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்,
பள்ளி பொருளாளர் வள்ளுவன்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரமேஷ், முனைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு முழு சந்திர கிரகண நிகழ்வினை செயல் விளக்கத்துடனும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு முழு சந்திர கிரகண விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கப்பட்டது.







