கோவில்பட்டியில் மாநில அளவிலான யோகா போட்டி

கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி உள்பட 18 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜய கரிசல் குளம் மகாத்மா காந்தி நடுநிலைப்பள்ளி, சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் பள்ளி, கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஆகியவை பெற்றன.
போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ் கல்ட்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சர்வதேச கடற்கரை கைப்பந்து நடுவர் ஸ்ரீனிவாசன், உண்ணாமலை கல்லூரி முதல்வர் ரவீந்திரன்,மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், வேல்பாண்டி, ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

தனியார் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர், தமிழ் கல்ட்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சூரிய நாராயணன், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்.







