கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லக்கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை என பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கியும் தற்போது வரை பஸ்கள் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், மாரிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகராஜா,சிவப்பிரகாசம், ஐ என் டி யு சி ராஜசேகரன்,மாவட்ட செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், மாவட்ட பொருளாளர் கார்த்திக்காமராஜ், நகர நிர்வாகிகள் முருகேசன், பங்காருசாமி, முத்துராமலிங்கம்,பழனிசாமி,முருகன், அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது.







