• October 22, 2026

தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி: முக்கிய குற்றவாளி சிக்கினார்  

 தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி: முக்கிய குற்றவாளி சிக்கினார்  

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  மர்ம நபர்கள் வாட்சப்  கால் மூலம் தொடர்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்,

அந்த பெண்ணிடம் ,உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூ. 2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்/ ,மேலும் மனித கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சத்தை நூதன முறையில் பறித்தனர்,

இது பற்றிய புகாரின்பேரில்  சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு 5பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிது ராஜ் ஜைஸ்வால் (43) என்பவரை கடந்த 28.8.2025 அன்று ஜார்கண்ட் மாநிலம் சென்று கைது செய்தனர்.

பின்னர்  தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று  சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்றுவருகிறது.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை துண்டித்துவிடவும், மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *