கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘உயிர் மருத்துவ கருவி’ பயிற்சி வகுப்பு
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் இயற்பியல் துறையும் கோயம்புத்தூர் அதினா பாண்டியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ‘உயிர் மருத்துவ கருவி’ என்னும் தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தின .

இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையும் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரையும் வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் அதினா பாண்டியன் பிரைவேட் லிமிடெட் நிறுவன பயிற்சியாளர்களான கிரியா சக்தி, கிரிதினா ஆகிய இருவரும் சேர்ந்து மாணவ, மாணவர்களுக்கு உயிர் மருத்துவ கருவி பற்றிய பயிற்சி அளித்தார்கள்.
இப்பயிற்சி வகுப்பில் 70 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிறைவாக இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் க.வேல்முருகன் நன்றியுரையாற்றினார்.
.







