தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி திறந்து வைத்தார். பின்னர் புத்தக அரங்குகளை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி., புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக, “தொடர்ந்து படி தூத்துக்குடி” […]
மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேரதல்களில் வாக்கு திருட்டு மோசடி நடந்துள்ளதாக அண்மையில் எதிர்க்கட்சி மக்களவை தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். மேலும் வாக்குத்திருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணயம் மற்றும் பாஜக வின் நூதன வாக்குத்திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டி வழியாக ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்ஒன்று புறப்பட்டு வந்தது, அந்த பஸ்சில் 46 பயணிகள் இருந்தனர், ராமநாதபுரம் மாவட்டம் மேல செல்லூரைச் சேர்ந்த செல்வத் துரை என்பவர் பஸ்சை ஒட்டி வந்தார்.,. கொத்தங்குளத்தை சேர்ந்த செல்லத்துரை நடத்துனராக இருந்தார், அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் காலங்கரைபட்டி பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சாலையோர உப்பு ஓடை பள்ளத்த்தில் சரிந்து விபத்தில் சிக்கியது. டிரைவர் […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ”லியோ படத்தின் வசூல் பொய் என சிலர் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். தயாரிப்பாளர் லலித்தின் வருமான வரித்துறை அறிக்கையை வைத்து , லியோ வசூல் உண்மையில்லை என சிலர் பேச, அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ”லியோ” திரைப்படம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படம் சற்று கலவையான […]
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அ.வேல்முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கையில் கூறி இருப்பதாவது,:- தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இந்த ஆகஸ்டு மாதத்தில் NPHH அரிசி மற்றும் சீனி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளருக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஆகையால் மேற்படி விஷயங்கள் தவிர்க்கும் […]
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகிற 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் வீடுகளில் விநாயகரை அலங்கரித்து வைத்து அவருக்கு பிடித்த பலகாரங்களை வைத்து சாமி கும்பிடுவார்கள். மேலும் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஊர்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை […]
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், 21.8.2025 அன்று ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுகத்திலிருந்து இத்தனை அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகள் ஒரே கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையின் மூலம் 25.0 3.2025 அன்று 75 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகத்தின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த இயந்திர சரக்குக் கையாளுதலில், துறைமுகம் ஒரு […]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 2025- 26 ஆண்டிற்கான தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான மாணவர் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறுவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போட்டிகளை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பொன்னுஸ் நிறுவனத் தலைவர் வேளாண் விஞ்ஞானி பரஞ்சோதி பொன்னுச்சாமி […]
கோவில்பட்டி பார்க் ரோடு எதிரே தனியார் மருத்துவமனை பின்புறம் கதிர்வேல் நகரைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர் டூவிலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். அந்த டூ விலர் ஒர்க் ஷாப் முன்பு பழுது பார்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ யை அணைத்தனர். […]
துபாய் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது. அதில் ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ‘வெட் டேட்ஸ்’ எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப் படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து […]







