சாலையோர ஓடை பள்ளத்தில் 46 பயணிகளுடன் அரசு பஸ் சரிந்து விபத்து
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டி வழியாக ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்ஒன்று புறப்பட்டு வந்தது, அந்த பஸ்சில் 46 பயணிகள் இருந்தனர்,
ராமநாதபுரம் மாவட்டம் மேல செல்லூரைச் சேர்ந்த செல்வத் துரை என்பவர் பஸ்சை ஒட்டி வந்தார்.,. கொத்தங்குளத்தை சேர்ந்த செல்லத்துரை நடத்துனராக இருந்தார்,

அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் காலங்கரைபட்டி பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சாலையோர உப்பு ஓடை பள்ளத்த்தில் சரிந்து விபத்தில் சிக்கியது.

டிரைவர் சாமர்த்தியமாக செயல் பட்டதால் அருகில் இருந்த புளியமரத்தில் மோதாமல் பள்ளத்தில் சரிந்து பஸ்நின்றது. பஸ்சில் இருந்த 46 பயணிகளும் லேசான காயத்துடன் தப்பினார்கள்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







