கோவில்பட்டியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரின் பாஜக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேரதல்களில் வாக்கு திருட்டு மோசடி நடந்துள்ளதாக அண்மையில் எதிர்க்கட்சி மக்களவை தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
மேலும் வாக்குத்திருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணயம் மற்றும் பாஜக வின் நூதன வாக்குத்திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர்சண்முகம், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சகரிக்கா ராவ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

மேலும் பேருந்துகளிலும் வாக்கு திருட்டு என ஸ்டிக்கரை ஒட்டினர். தொடர்ந்து இளைஞர் காங் கரஸ் ஆலோசனைகூட்டம் காந்தி மண்டபத்தில் நடை பெற்றது.இந் நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலை வர் கேடிபி. அருண்பாண்டியன், மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ், மாவட்ட பொறுப்பாளர் சுப்பராயலு, பிரேம்குமார், மாரிமுத்து, மாவட்ட செயலாளர் துரைராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், ஐஎன்டியுசி. ராஜசேகரன், சண்முக ராஜா, பொதுக்குழு உறுப்பி னர்கள் திருப்பதிராஜா, உமாசங்கர்,சிறுபான்மையினர் பிரிவு தலைவர்அருள்தாஸ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.







