காவல்துறை அதிகாரிகள் கால தாமதம்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த இந்து முன்னணி நிர்வாகிகள்
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகிற 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் வீடுகளில் விநாயகரை அலங்கரித்து வைத்து அவருக்கு பிடித்த பலகாரங்களை வைத்து சாமி கும்பிடுவார்கள்.

மேலும் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஊர்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று காலை 9 மணி நடக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு வந்து காத்து இருந்தனர்.

காலை 10.30மணி வரை ஆகியும் காவல் துறை அதிகாரிகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.







