பெரும்பாலான நியாய விலை கடைகளுக்கு ஆகஸ்ட் மாத அரிசி சீனி, ஒதுக்கீடு குறைப்பு
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அ.வேல்முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கையில் கூறி இருப்பதாவது,:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இந்த ஆகஸ்டு மாதத்தில் NPHH அரிசி மற்றும் சீனி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளருக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

ஆகையால் மேற்படி விஷயங்கள் தவிர்க்கும் பொருட்டு இருப்பு இல்லாத மற்றும் குறைவாக ஒதுக்கீடு செய்த நியாய விலைக் கடைகளுக்கு உடனடியாக அரிசி மற்றும் சீனி கூடுதல் ஒதுக்கீடு செய்து மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.







