கோவில்பட்டியில் டூ வீலர் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து
கோவில்பட்டி பார்க் ரோடு எதிரே தனியார் மருத்துவமனை பின்புறம் கதிர்வேல் நகரைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர் டூவிலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
அந்த டூ விலர் ஒர்க் ஷாப் முன்பு பழுது பார்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் பற்றி எரிய தொடங்கியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ யை அணைத்தனர். இருப்பினும் 2 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடைக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்







