மாவட்ட போட்டியில் வெற்றி: கோவில்பட்டி வஉசி ஆண்கள் பள்ளி அணி, மாநில போட்டிக்கு தகுதி

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 2025- 26 ஆண்டிற்கான தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான மாணவர் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறுவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போட்டிகளை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பொன்னுஸ் நிறுவனத் தலைவர் வேளாண் விஞ்ஞானி பரஞ்சோதி பொன்னுச்சாமி கலந்து கொண்டார்.

\
_14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குருமலை கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியை 3- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட ஆக்கி சங்க தலைவர் மணிமாறன், தெய்வ பாலன், வழக்கறிஞர் பெரியதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் செய்திருந்தார்.







