தேசிய முற்போக்கு திராவிடகழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமணண் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை ஏற்று, கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றியசெயலாளர்கள் பெருமாள்சாமி, முருகன் , மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் வைரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
தமிழ்நாட்டின் உணர்வுகளை சுதர்சன் ரெட்டி மதிப்பார்; ஆதரவு கூட்டத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின்
துணைத் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில், தெலங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். துணைத் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து இண்டியா கூட்டணி தலைவர்களை சந்தித்து சுதர்சன் ரெட்டி நேரில் ஆதரவு கோரி வருகிறார். அந்தவகையில், சென்னை வந்த அவர், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை […]
இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மண்டல மாநாடு, ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா, வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் அய்யலுசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் வரவேற்றார். இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாநில தலைவரும், […]
கோவில்பட்டி முத்து நகரில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டஅளவில்பெண்களுக்கான இறகுப்பந்து போட்டி முதன்முறையாக டர்போ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிக்குஇயற்கைவேளாண் விஞ்ஞானி பொன்னுச்சாமி பரஞ்சோதி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார், அரங்கின் நிறுவனர் ரமேஷ், நாடார் காமராஜர் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர், நடை பெற்று வரும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். போட்டிகளின் நடுவர்களாக […]
கோவில்பட்டியிலிருந்து ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் ஊராட்சிக்கு நாள்தோறும் அரசுப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சன்குளம், கோவிந்தன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு காலை நேரத்தில் செல்லும் பஸ்களில் மாணவர்-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 22) வெகுநேரமாகியும் பஸ் வராததால், மாணவர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிகளுக்குச் சென்றதாக கூறப்படுகிறது/ வழக்கமாக செல்லும் அரசுப் பஸ், திடீர் பழுது காரணமாக இயக்கப்படவில்லை […]
கோவில்பட்டி வடக்கு செவல்பட்டி புனித அந்தோணி மஹாலில் சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் 30 வது தென் மண்டல அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இப் போட்டியின் சிறப்பு விருந்தினராக வடக்கு செவல்பட்டி கிராம தலைவர்மரிய இன்னாசி முத்து மற்றும் பசிலிக்கா சர்ச் தலைவர் பாதர் மோயிசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுதாகர் ரெட்டி மறைவுக்கு கோவில்பட்டியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் சுதாகர் ரெட்டி உருவப்படத்துக்கு நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.’ மாவட்ட துணை செயலாளர் பாபு, நகரக்குழு உறுப்பினர் செல்லையா, நகர துணை செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர பொருளாளர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க […]
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை ,(ஆகஸ்ட் 25) “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.8.2025) பொதுச் செயலாளர்.பிரேமலதா சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், இட்லி குண்டான் (இட்லி கடை வைப்பதற்கு) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அவர் அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் இன்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட்டுக்கு பிறகு இந்தியாவின் தூணாக கருதப்பட்ட அவர் அதற்கேற்றவாறே சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விபி எம் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குறும்படம் திரையிடல் போட்டியில் கோவில்பட்டி கே ஆர் கலைக்கல்லூரி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கிய ‘உயிர் கவசம்’ என்னும் தலைக்கவசத்தை பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் மூன்றாம் பரிசை பெற்றது. இக் குறும்படத்தை உருவாக்கிய மாணவர்கள் நாகேந்திர பிரசாத்; கண்ணன்; ராஜ்குமார், அழகு சிவா ஆகிய 4 மாணவர்களை கோவில்பட்டி காவல் […]







