கோவில்பட்டியில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிடகழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமணண் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை ஏற்று, கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றியசெயலாளர்கள் பெருமாள்சாமி, முருகன் , மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் வைரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழுஉறுப்பினர் மலைராஜ் ,கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், சென்னையம்பட்டி நாராயணன்,மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் குவாளிஸ்ராஜ்,சுப்புராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
இதேபோல் கோவில்பட்டி பேருந்துநிலையம் முன்பு மாவட்ட சமூக வளைதள அணி செயலாளர் சதீஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன் நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் முன்னிலையில் மாநிலகேப்டன்மன்ற துணைசெயலாளர் வைரம் அன்னதானத்தை தொடக்கிவைத்தார் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் மலைராஜ் கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி முருகன் சென்னையம்பட்டி நாராயனன் மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் குவாளிஸ்ராஜ் சுப்புராஜ் மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் மதிமுத்து ஆழ்வார் தங்கபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே மற்றும் அரசு மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.







