தென்மண்டல சாரண சாரணியர் போட்டிகளில் தென்காசி மாவட்ட அரசுப்பள்ளி முதலிடம்
சாரண சாரணிய இயக்கம் தென்மண்டல பெருந்திரளணி திருநெல்வேலி மாவட்டம் மருதக்குளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 21.8.2025 முதல் 23.8.2025 வரை நடைபெற்றது.
39 கல்வி மாவட்டத்தில் 700 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் , தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி வழிகாட்டுதலின்படி கூடாரம் அமைத்தல் போட்டியில் முதலிடமும்,colour party போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்துள்ளார்கள்.

பெருந்திரளணியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் பெறும் நிகழ்வுகள். சாரண ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் சி.நடராஜன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா. பிராபாவதி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு பாராட்டு தெரிவித்தனர்







