சுதாகர் ரெட்டி மறைவுக்கு கோவில்பட்டியில் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுதாகர் ரெட்டி மறைவுக்கு கோவில்பட்டியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் சுதாகர் ரெட்டி உருவப்படத்துக்கு நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.’

மாவட்ட துணை செயலாளர் பாபு, நகரக்குழு உறுப்பினர் செல்லையா, நகர துணை செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர பொருளாளர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் வள்ளிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







