தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்; பிரேமலதா வழங்கினார்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை ,(ஆகஸ்ட் 25) “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது.
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.8.2025) பொதுச் செயலாளர்.பிரேமலதா சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், இட்லி குண்டான் (இட்லி கடை வைப்பதற்கு) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், அதேபோல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது.

இது தவிர டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவரக்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமில் இன்று (24.08.2025) கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர்.வி.இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் வி.விஜய் பிரபாகர்,தலைமை நிலையச் செயலாளர் .ப.பார்த்தசாரதி., கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.மோகன்ராஜ் , துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.பன்னீர்செல்வம் சந்திரன் அவர்கள், சுபா ரவி, மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.







