தென் மண்டல அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள்
கோவில்பட்டி வடக்கு செவல்பட்டி புனித அந்தோணி மஹாலில் சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் 30 வது தென் மண்டல அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இப் போட்டியின் சிறப்பு விருந்தினராக வடக்கு செவல்பட்டி கிராம தலைவர்மரிய இன்னாசி முத்து மற்றும் பசிலிக்கா சர்ச் தலைவர் பாதர் மோயிசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

இப் போட்டியில் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே பள்ளியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சென்சாய் செந்தில் செய்திருந்தார்.
கராத்தே பள்ளியின் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட செயலாளர்களான சென்சாய் கார்த்திக்,சென்சாய் அங்கு வேல், சென்சாய் கிஷோர் மற்றும் யாழினி, அவினாஷ், மணிகண்டன், மாரி கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்,







