கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம்;கிராம தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மண்டல மாநாடு, ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா, வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் அய்யலுசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் வரவேற்றார்.

இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாநில தலைவரும், காங்கிரஸ் மாநில துணை தலைவருமான வாழப்பாடி ராம.சுகந்தன் சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்னுச்சாமி பாண்டியன்,பிரேம்குமார்,சுப்புராயலு, மாநில பேச்சாளர் தீப்பொறி ராமர்,வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜா,சேவாதளம் சக்தி விநாயகர், மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜ்,மாவட்ட செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,ஐஎன்டியூசி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஐஎன்டியூசி கந்தசாமி நன்றி கூறினார்.

வாக்கு திருட்டு மூலம் பெற்றி பெற்ற பாஜக அரசு பதவி விலக வேண்டும். பிரதமர் பதவி விலக வலியுறுத்தி இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்படும். அமைப்புச்சாரா தொழிலாளர்களின் மகன், மகள்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகயை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். கடம்பூர் – குருமலை மற்றும் கயத்தாறு – எப்போதும்வென்றான் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







