மாவட்ட அளவில் பெண்களுக்கான இறகு பந்து போட்டி
கோவில்பட்டி முத்து நகரில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டஅளவில்பெண்களுக்கான இறகுப்பந்து போட்டி முதன்முறையாக டர்போ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டிக்குஇயற்கைவேளாண் விஞ்ஞானி பொன்னுச்சாமி பரஞ்சோதி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார், அரங்கின் நிறுவனர் ரமேஷ், நாடார் காமராஜர் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

நடை பெற்று வரும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
போட்டிகளின் நடுவர்களாக உடற் கல்வி இயக்குனர்கள் காளிராஜ், மாரியப்பன், கரிகாலன், சுடலை,ஜெயா, லட்சுமி, ஆகியோர் செயல்பட்டனர்.







