குறும்படம் தயாரித்து பரிசு பெற்ற கோவில்பட்டி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விபி எம் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குறும்படம் திரையிடல் போட்டியில் கோவில்பட்டி கே ஆர் கலைக்கல்லூரி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கிய ‘உயிர் கவசம்’ என்னும் தலைக்கவசத்தை பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் மூன்றாம் பரிசை பெற்றது.

இக் குறும்படத்தை உருவாக்கிய மாணவர்கள் நாகேந்திர பிரசாத்; கண்ணன்; ராஜ்குமார், அழகு சிவா ஆகிய 4 மாணவர்களை கோவில்பட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

குறும்படத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.







