கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா இன்று 3-ந் தேதி தொடங்கியது, காலை 9. மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கும்மியடித்தபடி முளைப்பாரியை சுற்றி வந்தனர்.. அப்போது பக்தி பாடல் பாடப்பட்டது. இரவு 7 மணிக்கு `அன்னையின் அவதாரங்கள்’ என்ற தலைப்பில் தேவியின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:- 4.8.2025 திங்கட்கிழமை காலை 9 மணி- […]
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை […]
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர், கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க உணவு பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவில்பட்டி, மாதாங்கோவில் ரோடு, கிருஷ்ணன் கோவில் ஜங்ஷனில் ஒரு மினி லாரியில் 40 மூட்டைகளில் சுமார் 2,000 கிலோ (2 டன்) ரேசன் அரிசியை கடத்திய வழக்கில் கோவில்பட்டி, ஊரணி 1வது தெருவைச் சேர்ந்த லுக்காஅசாரியா மகன் முத்துமாரியப்பன்(எ) சின்னமாரி (வயது 33) என்பவர் 16.7.2025 அன்று கைது […]
திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கவின் மீதான ஆணவ படுகொலையை கண்டித்தும், சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.. ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சுடலைமணி, முன்னாள் நகர நிர்வாகி அந்தோணிச் செல்வம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் […]
தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் லீச்சுற்றுக்கு தகுதி பெற்றன.இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 123ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் பரத்வாஜ் கலந்து கொண்டார். இவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்.நிகழ்வில் பேசிய பரத்வாஜ், பாடல் பாடி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஆட்டோகிராப் படத்தில் அவர் இசையமைத்து பாடிய ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ என்ற பாடலை பாடினார். விழாவில் கலந்து கொண்டவர்கள் இந்த பாடலை ரசித்து கேட்டு […]
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன்களான மாரி பாண்டியன் மற்றும் அருள்ராஜ் ஆகியோரை முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து போலீசார் 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று உப்பு உற்பத்தியாளர்கள், நிறுவனத்தார், கப்பல் தொழிலளார்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தி.மு.க. அரசும், நிலம் ஒதுக்கீடு […]
கோவில்பட்டி, இந்திராநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 54), தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மன அழுத்தத்தில் சாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லி வந்தார்,. இந்த நிலையில் இன்று காலை கடம்பூர்- கோவில்பட்டி ரெயில் நிலையம் இடையே திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரெயில் வந்தபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டார். வேகமாக வந்த ரெயில் அவர் […]
தமிழ்நாடு பள்ளிக்கூட ஆக்கி லீக் போட்டியின் இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் இன்று தொடங்கியது இப் போட்டிகள் இரண்டு நாள் நடைபெறும் முதல் நாளான இன்று நாக் அவுட் போட்டிகளும் நாளை லீக் போட்டிகளும் நடைபெறும் இப் போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன இன்று காலை தொடங்கிய முதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு துறை ஆய்வாளர் முனைவர் எஸ் […]







