கோவில்பட்டி காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா தொடங்கியது
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா இன்று 3-ந் தேதி தொடங்கியது,
காலை 9. மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கும்மியடித்தபடி முளைப்பாரியை சுற்றி வந்தனர்.. அப்போது பக்தி பாடல் பாடப்பட்டது.
இரவு 7 மணிக்கு `அன்னையின் அவதாரங்கள்’ என்ற தலைப்பில் தேவியின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது
தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

4.8.2025 திங்கட்கிழமை காலை 9 மணி- அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை.
இரவு 7 மணி- `பாராளும் பராசக்தி’ என்ற தலைப்பில் சூரியன் எப்.எம்.புகழ். விஜிபூரணசிங் பக்திச் சொற்பொழிவு
5.8.2025 செவ்வாய்கிழமை காலை 9 மணி-பக்தர்கள் தெற்கு நந்தவனத்திலிருந்து பால்குடம் எடுத்து வருதல்
நண்பகல் 12 மணிக்கு- பால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை,
மாலை 5 மணி –பெண் பக்தர்கள் மாவிளக்கு கையில் ஏந்தி நகர்வலம் வருதல்
மாலை 6 மணி- 21 அக்னிசட்டி நகர்வலம் வருதல்
இரவு 7 மணி- வண்ண ஊர்தியில் காளியம்மன் வெள்ளிச் சிம்ம வாகனத்தில் வெள்ளிகுடையின் கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்.

6.8.2025 புதன்கிழமை அதிகாலை 5. மணி -தெற்கு நந்தவனத்திற்கு பொங்கலிடுவதற்கு புனித நீர் எடுக்கச் செல்லுதல்,
காலை 6 மணி- கோவில் முன்பு பொங்கலிடுதல், காலை 9 மணிக்கு பொங்கல் சிறப்பு பூஜை.
காலை 11.30 மணிக்கு மேல்- பத்திரகாளியம்மன் கோவில் முன்புறம் போன்னம்பல் நாடார் கலையரங்கில் அன்னதானம்
மாலை 3 மணி- கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6. மணி- முளைப்பாரி ஊர்வலம் கோவிலைச் சுற்றிவந்து ஒளிவிளக்குகளுடன் மேளதாளத்துடன் நந்தவனம் கொண்டு சேர்த்தல்
7.8.2025 வியாழக்கிழமை மாலை 6 மணி- கோவில் நிறைந்த திருவிளக்கு பூஜை,
இரவு 9 மணி- மேலக்கரந்தை கலைவளர்மணி சந்தன செல்வி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி
8.8.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி- கோவில் நிறைந்த திருவிளக்கு பூஜை







