கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கிபோட்டி: வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி அணி `சாம்பியன்’
தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் மொத்தம் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் லீச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி 2-1 என்ற கோல்கணக்கில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்தது,
அடுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி அணி 3-0 என்ற கோல்கணக்கில் காமராஜ் பள்ளி அணியை வீழ்த்தியது,. செயின்ட் பால்ஸ் பள்ளி அணி 3-2 கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி அணையை வென்றது,

வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் காமராஜ் பள்ளி அணியை வீழ்த்தியது, இதே போல் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி 4-0 கோல் கணக்கில் காமராஜ் பள்ளி அணியை தோற்கடித்தது.
வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி அணி 3-1 என்ற கோல் ல்கனக்கில் நாடார் பள்ளி அணியை வீழ்த்தியது,.
இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றத,, 6 புள்ளிகள் பெற்று செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும் 3 புள்ளிகள் பெற்று நாடார் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும்தா பெற்றது.

பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் முனியசாமி, பட்டதாரி ஆசிரியர் ஜான்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்கள்
இவ்விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார் பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன் சுரேஷ்குமார் கிருஷ்ணமூர்த்தி அருள் பிரகாஷ் வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர் நடுவர்களாக காளிதாஸ் கார்த்திக் ராஜா, மதன்குமார் அஜித்குமார் சண்முகப்பிரியா ஆகியோர் செயல்பட்டனர்







