ஆணவ படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கவின் மீதான ஆணவ படுகொலையை கண்டித்தும், சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.. ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சுடலைமணி, முன்னாள் நகர நிர்வாகி அந்தோணிச் செல்வம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார்

ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் அய்யனார், நகர நிர்வாகிகள் முனீஸ்வரன்,ராகவ், ஒன்றிய நிர்வாகிகள் வசந்த்,தெய்வேந்திரன், ஆசாத், முன்னாள் நிர்வாகிகள் உமாசங்கர்,மாரிக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







