கோவில்பட்டியில் பள்ளிக்கூட ஆக்கி லீக் போட்டி தொடக்கம்
தமிழ்நாடு பள்ளிக்கூட ஆக்கி லீக் போட்டியின் இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் இன்று தொடங்கியது
இப் போட்டிகள் இரண்டு நாள் நடைபெறும் முதல் நாளான இன்று நாக் அவுட் போட்டிகளும் நாளை லீக் போட்டிகளும் நடைபெறும் இப் போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன

இன்று காலை தொடங்கிய முதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு துறை ஆய்வாளர் முனைவர் எஸ் கண்ணதாசன் மற்றும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்தின ராஜன் பயிற்சியாளர் முத்து குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ரா சண்முக பாரதி தலைமை தாங்கினார். ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் உடற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-
கோவில்பட்டி வேல்ஸ்- கயத்தார் அரசு பள்ளி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி அணி வானரமுட்டி அரசு பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது,
தூத்துக்குடி கால்டுவெல் அணி அகிலாண்டபுரம் மகாலட்சுமி பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது,
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளி அணி கயத்தாறு ஆர்.சி.பாத்திமா பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
கோவில்பட்டி காமராஜ் பள்ளி அணி தூத்துக்குடி சேவியர்ஸ் பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது,
கோவில்பட்டி வ.உ.சி.பள்ளி அணி, தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது,
கோவில்பட்டி நாடார் பள்ளி அணி தூத்துக்குடி கால்டுவெல் பள்ளிஅணியை 5-1 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது,
கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் அணி வேல்ஸ் பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது,
கோவில்பட்டி காமராஜ் பள்ளி அணி லட்சுமி மில் பள்ளி அணியை 4-1 என்ற கொள் கணக்கில் வெற்றிபெற்றது,
வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி நாடார் மேல்நிலைப்பள்ளி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன நாளை நடைபெறும் லீக் போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் அணி மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்







