கோவில்பட்டி அருகே ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி, இந்திராநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 54), தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மன அழுத்தத்தில் சாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லி வந்தார்,.

இந்த நிலையில் இன்று காலை கடம்பூர்- கோவில்பட்டி ரெயில் நிலையம் இடையே திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரெயில் வந்தபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டார். வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடசாமி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து மாடசாமி மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில், மாடசாமி தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.







