தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு வரும் போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் […]
கோவில்பட்டி அருகே மந்திதோப்பு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட இந்திரா காலனியில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்யாமல் காலதாமதப்படுத்துவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா உதவி செயலாளர் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்கான மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நாளை முதல் (23 7 2025) முதல் 27.7.2025 (ஞாயிற்றுக்கிழமை) வரை) நடைபெறுகிறது இப்போட்டியில் மொத்தம் 35 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. 35 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரண்டு மைதானங்களில் லீக் […]
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் ளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச்சென்ற போலீசார், கடந்த மாதம் 28ம் தேதி அவரை அடித்துக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித்குமாரை அடித்துக்கொன்ற 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பான […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.7.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர் இந்நிலையில், தற்போது, […]
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் MSSC சார்பாக சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான 2-வது மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவிலும், 19 வயதிற்குட்பட்டோ ருக்கான பிரிவிலும் கோவில்பட்டி ஹோலி .டிரினிட்டி பப்ளிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் பெற்றனர், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவிலும் இரணடாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். சாம்பியன் பெற்ற அணிகளின் வீராங்கக்னைகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்ற்கல்வி […]
நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60T மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1) (I a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு 1.7.2025 முதல் 17.7.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. […]
கோவில்பட்டி சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் தேவர் சிலை முன்பு சிவாஜி மன்றம் தலைவர் சுப்பாராயலு தலைமையில் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடைபெற்றது. இளையதிலகம் பிரபு ரசிகர் மன்ற தலைவர் ஆறுமுகபாண்டி முன்னிலையில், சிவாஜி உருவப்படத்திற்கு காமராஜ், திருப்பதிராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ராஜசேகரன், செல்வராஜ், வேலுச்சாமி , முத்துச்சாமி, துரைராஜ், கோபால் மற்றும் சிவாஜி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் இன்று காலை பங்கேற்க இருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலையில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட […]
கோவில்பட்டி நகராட்சி 35வது வார்டு கருணாநிதி நகர் காமராஜர் நாடார் இளைஞர் அணியினர் சார்பாக காமராஜரின் 123வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா ,தொழிலதிபர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலதிபர்கள் சின்னத்துரை,தங்கப்பாண்டியன், மயில்கர்ணன்,வெற்றிசெல்வன், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டிகளில் வெற்றிவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பேச்சிமுத்து நன்றி கூறினார்.







