மண்டல கைப்பந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளி `சாம்பியன்’
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் MSSC சார்பாக சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான 2-வது மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவிலும், 19 வயதிற்குட்பட்டோ ருக்கான பிரிவிலும் கோவில்பட்டி ஹோலி .டிரினிட்டி பப்ளிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் பெற்றனர்,

17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவிலும் இரணடாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். சாம்பியன் பெற்ற அணிகளின் வீராங்கக்னைகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்ற்கல்வி இயக்குனர். சீனிவாசன் ,ஊக்குவித்த பள்ளி முதல்வர் ஷகிலா ராணி ஆகியோரை ,பள்ளித் தாளாளர். பால்ராஜ் மனுவேல் பாராட்டினார்.







