காமராஜர் பிறந்தநாள் விழா
கோவில்பட்டி நகராட்சி 35வது வார்டு கருணாநிதி நகர் காமராஜர் நாடார் இளைஞர் அணியினர் சார்பாக காமராஜரின் 123வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது,

நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா ,தொழிலதிபர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலதிபர்கள் சின்னத்துரை,தங்கப்பாண்டியன், மயில்கர்ணன்,வெற்றிசெல்வன், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டிகளில் வெற்றிவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பேச்சிமுத்து நன்றி கூறினார்.







