இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்;பாமக மாநாட்டில் தீர்மானம்

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
பொதுக்குழுவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் கருப்பசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் (வடக்கு) மாடசாமி,(தெற்கு) சிவபெருமாள், (மத்திய) அந்தோணி செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி , மாவட்ட அமைப்புச் செயலாளர் காளிராஜ் , மாவட்ட பொருளாளர் வள்ளியம்மாள், மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முரளிசங்கர், மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன், மேற்கு மற்றும் தெற்கு மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அயன் சின்னதுரை, தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, மாநில துணைத் தலைவர் திருமலைக்குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய ,நகர ,மகளிர் அணி,மாணவர் அணி, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் லெனின்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:”-
*ஆகஸ்டு 10-ம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
*கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு கோவில்பட்டி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்.
*இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.
*விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு கோட்டமும், எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியமும் அமைக்க வேண்டும்.
*தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு 10 கி.மீட்டருக்கும் தடுப்பணை அமைத்து, ஆற்றுநீர் கடலில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







