பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்திதோப்பு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட இந்திரா காலனியில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்யாமல் காலதாமதப்படுத்துவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன். நகர செயலாளர் செந்தில்ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் ரெங்கநாதன், நகர உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன் மற்றும் இந்திரா காலனி பகுதி மக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து தலைமை இடத்து துணை வட்டாட்சியர் அருணாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.







