கோவில்பட்டியில் மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கிப்போட்டி; நாளை தொடங்குகிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்கான மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நாளை முதல் (23 7 2025) முதல் 27.7.2025 (ஞாயிற்றுக்கிழமை) வரை) நடைபெறுகிறது இப்போட்டியில் மொத்தம் 35 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன.
35 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரண்டு மைதானங்களில் லீக் போட்டிகள் மொத்தம் 60 போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சனிக்கிழமை கால் இறுதிப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் நடக்க உள்ளன.

போட்டி தொடக்க நாளை நடைபெறும் முதல் போட்டியை நாடார் உறவின்முறை சங்கர் தலைவர் ஆர் எஸ் ரமேஷ் துவக்கி வைக்கிறார் உப தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளியின் செயலாளர் ரத்தினராஜா, பொருளாளர் விஜயகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சாமி ராஜன், வேல்முருகன், வெங்கடேஷ், நாடார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்

தமிழகத்தில் இருந்து 30 நடுவர்கள் பணியாற்ற உள்ளனர் 630 ஆக்கி வீரர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள். வீரர்கள் அனைவரும் காமராஜர் அரங்கம், தேவேந்திர குல வேளாளர் கல்யாண மண்டபம், எல்.ஜி மஹால் ஆகிய இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
போட்டியின் இயக்குனராக சென்னையில் இருந்து வரும் நவநீதகிருஷ்ணன், நடுவர்களின் மேலாளராக ராமநாதபுரத்திலிருந்து வரும் தாமரை கண்ணன் ஆகியோர் செயல்படுகின்றனர் .
இப் போட்டியிலிருந்து தமிழக ஆக்கி அணிக்காக வீரர்களை 4 பேர் கொண்ட தேர்வு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் சார்பாக கோப்பைகள் வழங்கப்பட உள்ளன
போட்டியின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் குருசித்திர சண்முக பாரதி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுக ஆக்கி அணியின் பொறுப்பாளர் ராஜா குமார், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, தூத்துக்குடி துறைமுக ஆக்கி வீரர் கதிரவன் மற்றும் முன்னாள் ஆக்கி வீரர் பாலமுருகன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன் சுரேந்திரன் சுரேஷ்குமார் முருகன் திருச்செல்வம் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன் காளிதாஸ் அஸ்வின் சிவானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்







