கோவில்பட்டியில் சிவாஜி கணேசன் நினைவு தினம் .
கோவில்பட்டி சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் தேவர் சிலை முன்பு சிவாஜி மன்றம் தலைவர் சுப்பாராயலு தலைமையில் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடைபெற்றது.

இளையதிலகம் பிரபு ரசிகர் மன்ற தலைவர் ஆறுமுகபாண்டி முன்னிலையில், சிவாஜி உருவப்படத்திற்கு காமராஜ், திருப்பதிராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ராஜசேகரன், செல்வராஜ், வேலுச்சாமி , முத்துச்சாமி, துரைராஜ், கோபால் மற்றும் சிவாஜி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.








